எமனிடம் இருந்து உயிரை மீட்டுக் கொடுத்த நிலத்தடி கருப்பசாமியின் மகிமை: மீஞ்சூர் கோவில் அற்­பு­தம்

29

மனிதர்களுக்கு தினம் தினம் எத்தனையோ பிரச்சினைகளும், மன நெருக்கடிகளும், துன்பங்களும் ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளது. இந்த பிரச்சினைகள் அதிகமானால் எல்லா துன்பங்களுக்கும் தீர்வு தேடி செல்லும் இடம் கோயில்தான். கோயிலுக்கு சென்று இறைவன் முன்பாக நம் மனதில் உள்ள வேதனைகளை கொட்டி துன்பங்களை போக்கும்படி அழுது புலம்புவது வழக்கம்.

இதேபோல இறையருள்பெற்றவர்கள் கூறும் அருள்வாக்கை கேட்க செல்லும் பக்தர்களும் உண்டு. மீஞ்சூரில் உள்ள பதினெட்டாம்படி நிலத்தடி கருப்பசாமி கோயிலுக்கு சென்று வழிபடுவதுடன், கோயிலில் குறி சொல்லும் ராஜசேகர ஸ்வாமிகளிடம் நம் குறையை கூறி இறைவாக்கு பெற்று துன்பங்கள் போக்கிக்கொள்வதாக கண்ணீருடன் கூறும் பக்தர்களும் அதிகம்.

சென்னை மீஞ்சூரை அடுத்து இருக்கிறது அந்த தேவதானம் என்கிற கிராமம் அங்கு தான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் பதினெட்டாம்படி நிலத்தடி கருப்பசாமி . நிலத்தடி கருப்பசாமி நிலத்தை மிதித்தாலே போதும் நம் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும். துன்பங்கள் எல்லாம் துடைக்கப்பட்டு விடும். எல்லா வளங்களும் வீடு வந்து சேரும் என்கிற நம்பிக்கை அந்த பதினெட்டாம் படி கருப்பசாமி பக்தர்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கிறது . பதினெட்டாம் படி நிலத்தடி கருப்பசாமியிடம் போய் முறையிட்டால் தங்களது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுகிறது என்கிறார்கள் அவரது பக்தர்கள் .

கலியுகத்தின் காவல் தெய்வமாக விளங்கும் மீஞ்சூர் தேவதானம்  நிலத்தடி 18-ம் படி கருப்பசாமி ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் வாக்கு சொல்லப்படுகிறது . அதைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடுகின்றனர் .

முன்வினையோ செய்வினையோ எதுவாக இருந்தாலும் பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் போய் முறையிட்டால் அது தீர்த்து வைக்கப்படுகிறது. அமாவாசை நாட்களில் அங்கே சிறப்பு யாகமும் நடைபெறுகிறது . பல்வேறு மூலிகை பொருட்கள் அக்கினி தேவனுக்கு சமர்ப்பித்து நடத்தப்படும் அந்த யாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள்.  யாக முடிவில் பக்தர்களே பங்கேற்று நவ தானியங்களை அந்த யாக குண்டத்தில் ஆகுதியாக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கருப்பசாமி பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை மனதில் நினைத்து நவதானியத்தை அமாவாசை நாட்களில் நடைபெறும் அந்த யாக குண்டத்தில் சமர்ப்பித்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை .

வெளியே சொல்ல முடியாத மன கஷ்டங்கள், நீண்ட நாளாய் இழுத்தடிக்கும் யாராலும் தீர்த்து வைக்க முடியாத வம்பு வழக்குகள் உடல் உபாதைகளுக்கு பதினெட்டாம் படி நிலத்தடி கருப்பசாமியிடம் சென்றால் அவர் பார்த்துக் கொள்வார், தீர்த்து வைப்பார் என்கிற நம்பிக்கை அவரது பக்தர்களிடம் இருந்து வருகிறது.

அம்மாவாசை அன்று மட்டுமின்றி பௌர்ணமி நாட்களிலும் பதினெட்டாம்படி கருப்பசாமி ஆலயத்தில் விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன . வாரம் தோறும் வியாழன் அன்றும் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் கருப்புசாமி அருள்வாககு சொல்கிறார். இங்கு பரிகார பூஜைகள் நடைபெறுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் மீஞ்சூர் செல்கின்றன . அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மீஞ்சூர்- தேவதானம் நிலத்தடி கருப்பசாமி ஆலயத்தை அடைய முடியும்.

பதினெட்டாம்படி நிலத்தடி கருப்பசாமி ஆலயத்திற்கு சென்றால் அங்கே விற்கப்படும் பூஜை பொருட்களுடன் மூன்று எலுமிச்சம் பழங்களை தருகிறார்கள் . அதில் ஒன்றை ஆலயத்தின் வாசலில் இருக்கும் குதிரை மேடை கருப்பண்ணசாமி படிக்கட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் தாம்பாள தட்டில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துவிட்டு, நம் மனதிற்குள் நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை சொல்லி அதிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பிரார்த்தனை செய்து குதிரை மேடை கருப்பசாமியை சுற்றிவந்து ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

  ஆலயத்தின் உள்ளே இடதுபுறம் முனீஸ்வரர் சன்னதி அமைந்திருக்கிறது. அவருக்கு முன்னால் இருக்கும் தாம்பாளத்தில் ஒரு எலுமிச்சை கனியை வைத்து மீண்டும் பிரார்த்திக்க வேண்டும் . அதன் பின் நிலத்தடி பதினெட்டாம் படி கருப்பசாமி கருவறை சன்னதி முன் நின்று , அங்கே இருக்கும் தட்டில் மூன்றாவது எலுமிச்சை பழத்தை வைத்துவிட்டு உங்கள் கோரிக்கைகளை மனதிற்குள் நினைத்து பிரார்த்தித்துக் கொண்டால் போதும். உங்களது கோரிக்கைகள் இறைவனிடம் போய் சேர்ந்து விட்டதாகவே நம்பிக்கை கொள்ளலாம் .

அதன் பின் நடைபெறும் பூஜைகள் மற்றும் யாகங்களில் பங்கேற்க வேண்டும். பின்னர் நடைபெறுகிற அருள் வாக்கு நிகழ்ச்சியில் நிலத்தடி கருப்பசாமி, ஆலய நிர்வாகியும் கருப்பசாமியின் உபாசகருமான ராஜசேகர் மீது இறங்கி அருள்வாக்கு சொல்ல அழைக்கிறார்.

உங்களது ஊரையோ அல்லது உங்களது பிரச்சனையையோ குறிப்பிட்டு கருப்பசாமி அழைப்பார் , அப்போது நீங்கள் எழுந்து அவர் அருகில் சென்றால் போதும் அவரே உங்களுக்கு இன்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை கேட்பார். நம் பிரச்சனைகளை சொல்லாமலேயே எப்படி தெரிந்தது என ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால்குதிரை மேடை கருப்பசாமி முன் நின்று உங்கள் பிரச்சனைகளை மனதிற்குள்ளாக நினைத்து பிரார்த்திக்கும் போதே அவை கருப்பசாமியின் கவனத்துக்கு சென்று விடுகிறது . அதைத்தான் இப்போது நேரில் நின்று பேசும் கருப்பசாமி கேட்கிறார் என்கிறார்கள்.

பிரச்சனைகளை கருப்பசாமியிடம் கூறியதும் அதற்கான தீர்வுகளை அளிக்கிறார் . பிரச்சினைகள் எப்போது தீரும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அருள்வாக்கில்  கூறுவார் . அதன்படி நடந்து கொண்டால் போதும் உங்கள் பிரச்சனை தீர்ந்து நிம்மதி ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள். பக்தர்கள் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தும் கருப்பசாமி ஆலயத்திற்கு ஒரு முறை போய் வாருங்கள் உங்கள் வாழ்வும் வளமாகும்.

கருப்பசாமியின் அருள்பெற்ற பக்தர்களின் அனுபவங்களை அவர்களே சொல்கிறார்கள்…

தேவகி (திருவேற்காடு)

எனக்கு வயிறுவலி வந்து எந்திரிச்சு நடக்கக்கூட முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போ இந்த கோயிலுக்கு வந்ததும் பூசாரி ஒரே ஒரு பழம் தந்து சாப்பிட சொன்னார். அதை சாப்பிட்டதும் எனக்கு வயிற்றுவலி போயிருச்சு. 15 நாள் கழிச்சு அம்மாவாசை பூஜையில் கலந்துக்க சொன்னார். அதேமாதிரி பூஜையில் கலந்துக்கிட்டேன். இதுவரைக்கு எனக்கு வயித்துவலி வரவே இல்லை. இங்க வந்தா எந்த உடல் உபாதைகளும் உடனே குணமாயிருக்குறது நம்பிக்கை.

சிவஞானம் (தேவதானம் )

எனக்கு இதே ஊர்தான். என் கணவருக்கும் இதே ஊர்தான். கல்யாணமாகி 28 வருஷம் ஆகிருச்சு. எனக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுச்சு. இதனால சொந்த ஊருல இருக்க முடியாம குடும்பத்தோட வெளியூர் போய்ட்டேன். சில வருஷம் கழிச்சு எங்க ஊருக்கு நிலத்தடி கருப்பசாமி வந்துருச்சுன்னு சொன்னாங்க. உடனே கோயிலுக்கு பொய் என்னோட கஷ்டத்தை சொன்னேன். இனி உனக்கு எந்த கஷ்டமும் வரத்து. சொந்த ஊருக்கே வந்துருன்னு அப்பா (கருப்பசாமி) சொன்னார். அத்துப்படி மறுபடி ஊருக்கு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் கோயிலுக்கு சேவை செய்யுறதுதான் என் வேலையே.. உனக்கு எந்த கஷ்டமும் வராம பாத்துக்குறேன். ஆனா எச்சரிக்கையா இருக்கணும்னு அப்பா சாமி சொன்னார். பல வருசத்துக்கு முன்னாடி என் மக்கள் கோயிலுக்கு கோலம் போட்டு வச்சிருந்தா. அன்னைக்கு நைட் என் கனவுல எமதர்மன் என்னோட மகளை கூட்டிக்கிட்டு போற மாதிரி கனவு கண்டேன். உடனே அப்பா சாமி அங்க வந்து என்னோட கோயில்ல போட்ட கோலம் கூட இன்னும் கலையுல. அதுக்குள்ளே என்னோட பொண்ணை உயிரை எடுக்க வந்துட்டியா? அதுக்கு விடமாட்டேன்னு சொல்லி தடுத்தார்.

மறுநாள் என் மக்களுக்கு வலிப்பு வந்து உயிர் போற நிலைமை வந்துருச்சு. எனக்கு கூட சொல்லாம சாமி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப்போய் 7 நாள் வசித்து மறுபடி கோயிலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. உயிர் போயிருக்குற நிலையில அப்பா சாமிதான் காப்பாத்துனார். எம தர்மன் கிட்ட இருந்தே என் மகளை காப்பாத்திட்டார். அப்பாவை நம்புனா யாரையுமே அவர் கைவிடலை.. இங்க வர எல்லோரையுமே சமமாத்தான் நடத்துவார். ஏழை, பணக்காரன்னு எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரையும் அவரோட பிள்ளைகள் போலத்தான் நல்லபடியா பார்த்துக்குறார் என்றார் கண்ணீருடன்….

வசந்தி, கொருக்குப்பேட்டை..

நான் வருசமா இந்த கோயிலுக்கு வந்துட்டு இருக்கிறேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள். இங்க வந்தப்புறம்தான் என்னோட ரெண்டு குழந்தைகளும் வீடு கட்டுனாங்க. இங்க விபூதி தந்தா எந்த பிரச்சினையும் தீர்ந்துரும்.. பண கஷ்டம், மன கஷ்டம் எதுவா இருந்தாலும் இங்க வந்த கண்டிப்பா சரியாகிவிடும்…. இங்க வர்ற எல்லாருக்குமே நல்லதுதான் நடந்துருக்கு…..

முனியம்மா, வியாசர்பாடி…

6 வருசமா இந்த கோயிலுக்கு வரேன். எனக்கு திடீர்னு ரெண்டு காலும் நடக்க முடியலை. காலு ரெண்டும் கிடு கிடுன்னு ஆடும். இந்த கோயிலுக்கு வந்த பிறகு கால்ல குணமாயிருச்சு. இங்க வந்த பிறகு நான் நல்லா இருக்கிறேன்…

இந்துலேகா, கொளத்தூர்…

நான் இந்த கோயிலுக்கு 2018-ல இருந்து வரேன். அப்பாவை நான் பாக்கணும்னு நினச்சதுமே அன்னைக்கு நைட் கனவுல போசாரி வந்துருவார். உடனே நான் இந்த கோயிலுக்கு வந்துருவேன். நாம இங்க வந்து என்ன வேண்டுனாலும் உடனே நடக்கும் . நான் கேட்டரிங் தொழில் செஞ்சுட்டு வரேன். நடுவுல தொழில்ல வேலை கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டேன். இவர்கிட்ட வேண்டுனதுமே எனக்கு நிறைய ஆர்டர் கிடைச்சுது. இப்போ நான் ரொம்ப நல்லாவே இருக்கிறேன். நாம எதை நினைச்சாலும் அப்பா செஞ்சு கொடுத்துருவார்.

இவ்வாறு கோயிலுக்கு வரும் எல்லா பக்தர்களும் இங்க வந்துட்டு போனாலே கஷ்டம் போயிருது. பிரச்சினைகள் தீர்ந்துருது. உடம்பு பிரச்சினைகள் தீர்ந்து போயிருது… நம்பி வந்தா நல்லதே நடக்கும்னு சொல்லுறாங்க… நம்பிக்கை வைத்தால் கடவுளும் நமக்கு அருள் புரிவான் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.