கூலி படத்திற்கு ஒரு டிக்கெட் ரூ.3,500 தானாம்???

25

ரஜினிகாந்த் நடித்து வரும் 14-ம் தேதி வெளியாக உள்ள கூலி திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் 3 நாள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி டிக்கெட் விலையை தியேட்டர்களிலேயே 3500 ருபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் என பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருவது திரைப்படத்தை காண காத்திருக்கும் ரஜினி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கதநாயகனாக நடித்துள்ள கூலி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகர்களான நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் சத்யராஜ், ஸ்ருதிகாசன் உள்ளிட்ட pala பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பல நூறு கோடி தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் கேசட் வெளியீட்டு விழாவைக்கூட மிக பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினர்.

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வரும் 14-ம் நீதி வியாழனன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பே தொடங்கியது. இந்த திரைப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ரஜினியின் தீவிர ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். அதுவும் முதல் நாள் முதல் காட்சியையே பார்த்துவிட வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் ஆர்வம். இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதுமே திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் காலைமுதல் காத்திருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். கேரளாவில் உள்ள திரை அரங்கில் வெளியாகும் கூலி திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்து டிக்கெட்டுக்குகளை வாங்க முண்டியிட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கூலி பட டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால் தியேட்டர்களில் அதிகாலை முதலே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் கூட்டம் காத்துக்கிடந்தது . வழக்கமாக இதுபோன்ற பிரபல நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு 500 ருபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு தியேட்டர்களில் விற்பனை செய்வது வழக்கம். இவ்வளவு கூடுதல் விலைக்கு விற்றாலும் ரசிகர்கள் பணத்தைப்பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலைக்கு வாங்குவதும் வழக்கம். இந்த திரைப்படம் வியாழனன்று வெளியானாலும், வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் என்பதால் விடுமுறை நாளாகும். அடுத்ததாக சனி, ஞாயிறு வழக்கம்போல விடுமுறை நாட்கள் என்பதால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பலமடங்கு கூட்டம் கூடிவிட்டது. இதை பயன்படுத்தி முதலில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்ய தொடங்கிய தியேட்டர் நிர்வாகத்தினர் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து திடீரென 3 ஆயிரத்து 500 ருபாய் கட்டணம் என பலமடங்கு உயர்த்தி டிக்கெட்டுகளை விற்க தொடங்கிவிட்டனர். 2 பேர் படம் பார்க்க சென்றாலே 7 ஆயிரம் ருபாய் டிக்கெட்டுக்கு, பாப்கார்ன், ஐஸ் கிரீம் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளுக்கு என கிட்டத்தட்ட 10 ஆயிரம் ருபாய் செலவழிக்க வேண்டிய நிலை. இருப்பினும் இந்த டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி சென்றதுதான் அதிர்ச்சி.

வழக்கமாக 170 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த டிக்கெட்டுகளை 20 மடங்கு உயர்த்தி விற்பனை செய்தாலும் இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசுத்துறையும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. படத்தை தயாரிப்பதும், வெளியிடுவதும் ஆளும் கட்சின் குடும்ப உறுப்பினர்கள். எனவே இவர்களால் எதையும் செய்ய முடியாது என்கின்றனர் ரஜினி ரசிகர்கள். கூடுதல் கட்டணத்திற்கு விற்றல் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்பதுதேன் வேதனையின் உச்சக்கட்டம் என்கின்றனர் ரசிகர்கள்.