விபத்தில் முறிந்த எலும்புகளை 7 நாளில் குணப்படுத்தலாம்: ஆதி சித்தர்

விபத்துகளினால் ஏற்படும் எலும்பு முறிவுகளை 3 முதல் 7 நாளில் சரி ய்வதோடு 15 நாட்களுக்குள் இயல்பு வாழ்க்கைக்கு சித்த மருத்துவம் மூலம் நாம் குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் சிரப் குடிப்பதன் மூலம் உடலுக்குள் எலும்பு அரிப்பு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்கிறார் ஆதி சித்தர்.

வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் முத்து வெங்கடாசலம் என்கிற ஆதி சித்தர். இவர் தனது சிறுவயது முதலே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு சிவன் வழிபாட்டில் இறங்கினார். மதுரை சொந்த ஊராகும். இவர் சென்னைக்கு வந்து தற்போது வில்லிவாக்கத்தில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். ஆன்மீக நாட்டம் காரணமாக திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து நடந்து சென்று பல மாதங்கள் தங்கி இருந்து பல்வேறு சித்தர்களை வழிபட்டு வந்தார். இவரும், திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்ற மூக்கு பொடி சித்தரும் ஒரே குருவிடம் பயிற்சி பெற்றவர்கள்.

இதன்பிறகு ஆதி சித்தரின் பெற்றோர் வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்துவிட்டதால் இவரால் முழு நேர ஆன்மீகத்தில் ஈடுபட முடியவில்லை. சித்தர்களுடன் பழக்கத்தில் இருந்தபோது பல்வேறு மூலிகைகளை பற்றி அறிந்து தற்போது இந்த மூலிகைகள் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தி வருகிறார். இவர் உடைந்த எலும்புகளை விரைந்து ஒட்டிக்கொள்ள செய்யும் சித்த மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்குகிறார்.

இந்த மருத்துவம் குறித்து ஆதி சித்தர் கூறும்போது, பண்டைய காலங்களில் போருக்கு செல்லும் வீரர்களின் எலும்புகளுக்கு பலத்த சேதம் ஏற்படுவது வழக்கம். பலரது எலும்புகள் சுக்கு நூறாக உடைந்துவிடும். இந்த உடைந்த எலும்புகளை விரைந்து ஒன்று சேர்க்கவும், விரைவில் குணமடையவும் இந்த மருத்துவ முறையை அப்போதைய சித்தர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர். இதன்பிறகு இந்த மருத்துவம் குறித்து எந்த குறிப்பையும் எழுதி வைக்காமல் மறுத்துவிட்டனர். ஆனால் திருவண்ணாமலையில் சுற்றி தெரிந்தபோது சித்தர்கள் மூலம் இந்த சிகிச்சை முறையை கண்டுபிடித்தேன். இதேபோல நம் உடலுக்குள் உள்ள எலும்புகளை கிருமிகள் அரிப்பதால் எலும்புகள் அரிக்கப்பட்டு உடல் பலவீனமாகும். இந்த எலும்புகளை குணப்படுத்தும் சொட்டு மருந்தை ஆங்கில மருத்துவத்தில் ஒருமுறை பயன்படுத்த 2 ஆயிரத்து 500 ருபாய் வரை செலவழிக்க வேண்டும். ஆனால் குறைந்த செலவில் இந்த நோயையும் குணப்படுத்தும் மருந்தை தயாரித்து வைத்துள்ளேன். கிட்டத்தட்ட ஒரு சில வாரங்கள் இந்த “சிரப்”பை பயன்படுத்தினாலே எலும்பு அரிப்பு நோயை குணப்படுத்த முடியும்.

முறிந்த எலும்புகளை சரி செய்ய காட்டாமணக்கு செடிதான் முக்கிய மருந்தாகும். கருப்பு உளுந்தை ஊற வைத்து அரைத்து காட்டாமணக்கு செடியின் இலைகளை சேர்த்து கட்டு கட்டுக்கட்டினால் சில்லு, சில்லாக உடைந்த எலும்புகளை கூட 3 முதல் 7 நாளில் சேர்த்துவிட முடியும். 15 நாட்களுக்குள் நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இதற்கான மருந்தை நான் கண்டுபிடித்து என்னிடம் வருபவர்களை குணப்படுத்தி வருகிறேன். மேலும் 2 பச்சை வாழை பழங்களுடன், அருகம்புல்லையும், நான் ரகசியமாக தயாரித்து வைத்துள்ள குருமருந்து எனப்படும் மூலிகை மருந்தையும் சேர்த்து இந்த “சிரப்” தயாரிப்போம். இந்த மருதை நாம் ஒரு வாரத்திற்கு மேல் குடித்து வந்தால் எலும்புகள் வலுப்பெறுவதோடு எலும்பு அரிப்பு நோய் முற்றிலும் குணமாகிவிடும். இதுபோன்று பல்வேறு நோய்களுக்கும் சித்த மருத்துவம் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும் என்கிறார் ஆதி சித்தர்.

Comments (0)
Add Comment