பேனல் பட்டியலில் இருந்து நீக்­கப்­பட்ட சீனியர் டிஜிபியின் பெயர்? பர­ப­ரப்பில் தமி­ழக காவல்­து­றை

டிஜிபி பேனல் பட்டியலில் இருந்து சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியின் பேரை திடீரென தமிழக அரசு நீக்கி காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரியை நியமிக்க மேலும் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி பட்டியலில் இருந்து நீக்கவும் முதல்வர் ஆதரவு உள்வட்ட அதிகாரிகள் தீவிரம் காட்டுவதால் காவல்துறை வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடக்கிறது.

தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஓய்விற்கு பிறகு நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தனர். முதலவரின் ஆசி பெற்ற ஐ.எஸ்.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர். இந்த நியமனத்தை எதிர்த்து மதுரையை சேர்ந்த மக்கள் கண்காணிப்பாக தலைவர் ஹென்றி டிபேன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுப்பிய 8 டிஜிபிக்கள் பெயர் பட்டியலில் இருந்து 3 பேர் பட்டியலை இறுதி செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த 3 பேர் பட்டியலில் இருந்து ஒருவரை நிரந்தர டிஜிபியாக நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன்படி வரும் 26-ம் தேதியன்று டிஜிபி பேனல் பட்டியல் தயாரிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை மத்திய பணியாளர் தேர்வாணையம் கூட்டியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம் மட்டும் கலந்து கொள்ள உள்ளார். தமிழக அரசு ஏற்கனவே டிஜிபி பேனல் பட்டியலுக்கு தற்போதைய சீனியர் டிஜிபிக்களான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகிய 8 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைத்துள்ளது.

இந்த பட்டியலில் உள்ள சீனியர் டிஜிபிக்கள் இதுவரை வகித்த பதவிகள், சட்டம் ஒழுங்கு அனுபவங்கள், லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியபோது தொடர்ந்த வழக்குகள், இவர்கள் மெது குற்றசாட்டுகள் உள்ளதா? என்பது உள்ளிட்ட விவரங்களை சேர்த்து அனுப்புவதோடு, இவர்களுக்கு டிஜிபி பேனல் பட்டியலில் சேர்க்கலாம் என்ற சான்றிதழையும் சேர்த்து அனுப்புவது வழக்கம்.

இதேபோல 8 பேர் பட்டியலையும் தமிழக அரசு அனுப்பி இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இந்த பட்டியலில் இருந்து சீனியர் டிஜிபியின் பெயரை நீக்கும்படி மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. காரணம் இந்த அதிகாரி சமீபத்தில் வகித்த பதவியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகார் காரணம்.

ஆனால் இது போன்ற புகார்கள் வந்தாலும் அந்த புகார்களின் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சார்ஜ் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த சீனியர் அதிகாரி மீது வெறுமனே புகாரை விசாரித்து விட்டு இவரது பெயரை டிஜிபி பேனல் பட்டியலில் இருந்து நீக்கிவிடும்படி கூறி பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இவரைப்போலவே சீனியர் பட்டியலில் உள்ள சில அதிகாரிகள் பெயரையும் நீக்க முதல்வர் உள்வட்ட அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் பரபரப்பாக உள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரியை தவிர வேறு எந்த அதிகாரியும் டிஜிபி பதவிக்கு வந்துவிட கூடாது என்பதற்காக இந்த அதிகாரிகள் எதற்கும் துணிந்தவர்களாகிவிட்டனர். இதற்காக சீனியராக உள்ள அதிகாரிகள் மீது உள்ள பழைய குற்றச்சாட்டுகளைக்கூட தேடிப்பிடித்து பட்டியிலில் இருந்து நீக்க முடியுமா? என முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது ஒரு தவறான முன் உதாரணமாகும். வழக்கமாக தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு நல்ல பதவிகள் கொடுத்ததும், வேண்டப்படாத அதிகாரிகளை டம்மி பதவிகளில் போட்டும் பழிவாங்குவது வழக்கம். ஆனால் காவல்துறையின் முதன்மை பதவிக்கே இதுபோன்ற தவறான பாதையை இந்த அதிகாரிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இது காவல்துறையின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் குலைத்துவிடும். அரசியல்வாதிகள்தான் தங்களுக்கு வேண்டப்படாதவர்களை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட பல்வேறு சதி செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் கட்டுப்பாடுமிக்க துறை என கூறிக்கொள்ளும் காவல் துறையிலேயே இதுபோன்ற நடவடிக்கைகளில் சில அதிகாரிகள் ஈடுபடுவது வரும் காலத்தில் எந்த சீனியர் அதிகாரியாலும் டிஜிபி பதவியை எட்டிப்பிடிக்க முடியாத நிலையை உருவாக்கிவிடும். இது மிகவும் மோசமான காலகட்டமாக காவல்துறைக்கு மாறிவிட்டது. இதை முதல்வர் அறிந்து சரியான டிஜிபியை தேர்வு செய்வதோடு, இதுபோன்ற அதிகாரிகளை தன்னிடம் சேர்க்காமல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

Comments (0)
Add Comment