பன்னீர் ரோஜா­ காணிக்கை செலுத்­தினால் நடக்கும் அதிச­யம்: திகைக்க வைக்கும் தஸ்­தக்கீர் பாவா தர்­­கா

எல்லாம் வல்ல இறைவனின் கரு­ணை, அரு­ள், வல்­ல­மை­ மற்­றும் அவ­ன­து அடை­யாளங்கள், அற்­பு­தங்கள், அதி­ச­யங்கள் அனைத்தும் மங்­காமல் பிர­தி­ப­லித்து நின்று இவ்­வு­ல­கில் பறை சாற்ற வைப்­பது கோவில்கள், சித்­தர்கள் வாழும் ஜீவ ­ச­மா­திகள் மற்றும் மகான்கள் அடங்­கப்­பட்­டுள்ள தர்­காக்­க­ளில்தான். ஊண், உறக்­க­மி­ன்றி ஏக இறைவ­னை அடையும் பொருட்டு உலக இச்­சை­களை மறந்து, ஆ­சை­களை துறந்து இறை நேசர்­க­ளாக வாழ்ந்து விட்டுச் சென்ற இந்த அவ்­லி­யாக்­களின் அடக்­கத்­த­லங்­க­ளின் புகழ் எப்­போதும் மங்­காது என்றும் நிலைத்­தி­ருப்பதே அவர்­க­ளது ஆன்­மிக ஆற்­றல்­க­ளுக்கு சிறந்த உதா­ர­ண­மாக திகழ்­கி­ற­து.

உலகம் முழு­வ­திலும் இறை­­நே­சர்கள் நிறைந்­தி­ருந்­தாலும் சித்­தர்கள், வலி­மார்கள் நிறைந்த புனித பூமியாக திகழ்வது சென்னை நக­ருக்­கு கிடைத்த பெரிய கொடுப்­பனை என்­கின்­றனர் ஆன்­மிக அறி­ஞர்கள். பிரார்த்­தனை நிறைவேற வேண்­டியும், ஞானம் பெறு­வ­தற்­­­காகவும் வட இந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்கள் அஜ்­மீர் தர்­கா­வுக்கும், தென்னிந்­தி­யாவில் வாழ்­ப­வர்கள் நாகூ­ர் தர்­கா­வுக்கும் செல்­கி­ன்­றனர். அதே போல சென்னை மாகா­ணத்தில் உள்­ள­வர்கள் மவுண்ட்ரோடு தர்­கா­வுக்கும், கோவளம் தர்­கா­வுக்கும் செல்­வது வழக்­கமாக உள்­ளது.

சென்னை வாசிகள் நம்­பிக்­கை­யுடன் வந்து செல்லும் ஆன்­மிகத் தலங்களில் ஒன்­றாக விளங்­கு­வது சென்னை திரு­வல்­லிக்­கே­ணியில் அமைந்­துள்ள அல்­லா­ஹ்வின் சர்­வ வல்­லமை பெற்ற தஸ்­தகீர் சாஹிப் தர்கா அடக்­கத்­த­ல­மா­கும்.

பேய், பிசா­சு, ஜின்னு ஷெய்த்தான் மிரண்­டோ­டும்

பக்­தர்கள் என்ன குறை­களை மனதில் நினைத்து தஸ்­தகீர் சாஹிப் தர்­கா­­வுக்கு வந்து முறை­யிட்டு சென்றாலும் அது நிச்­சயம் நிறை­வே­று­கி­றது என்­­ற நம்­பிக்கை உள்­ள­து. செய்­வினை, சூனியம், பேய், பிசாசு, ஜின்னு, ஷெய்த்­தா­ன்­கள் மற்றும் கண்­ திருஷ்­டி­களால் ஏற்­ப­டும் பிரச்­சி­னைகள் தஸ்­தகீர் சாஹிப் தர்­காவில் நொடிப்­பொ­ழுதில் விலகி விடு­கி­றது என்­கின்­றனர்.

பன்னீர் ரோஜாப் பூ காணி­க்­கையின் மகத்­து­வம்

அது மட்­டு­மின்றி திரு­மண தடை, குழந்­தை­யின்மை போன்ற குறைகளும் இங்கு தீர்­கி­றது. தஸ்­தக்கீர் சாஹிப் பாவா­வுக்கு பிடித்­த­மான பன்னீர் ரோஜாப்பூவுடன் வந்து வேண்­டினால் நிச்­சயம் வேண்­டு­தல்கள் நிறை­வேறும் என்­பது அங்கு வந்து செல்லும் மக்­களின் அசைக்க முடி­யாத நம்­பிக்கை உள்­ளது.

யார் இந்த தஸ்­தக்கீர் சாஹிப் பாவா

யார் இந்த தஸ்­த­கீர் சாஹிப் அவ்­லி­யா, இவர் திரு­வல்­லிக்­கே­ணிக்கு வந்து ஜீவ­ ச­மா­தி­யான வர­லாறு என்ன என்று பார்த்த போது பிர­­மிப்­பூட்டும் வித­மாக இருந்­தது.

ஆடம்­ப­ரத்தை துறந்­து அல்­லாஹ்வின் வழி­யில்…

கிபி 1720 ஆம் ஆண்டுகளில் கர்­நா­ட­கா மாநிலம் பீஜெப்­பூரில் இருந்து தஸ்­தகீர் சாஹிப் சென்­னைக்கு வந்­துள்ளார். துருக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், பீஜெப்பூரின் ஆதில் ஷாஹி ­­­என்ற மன்னர் வம்சத்தைச் சேர்ந்­தவர். ராஜ குடும்­பத்தில் பிறந்து மிகப்­பெரும் செல்­வந்தரானாலும் தஸ்­தகீர் சாஹிப் அனைத்­தையும் துறந்­த­வ­ராக இறை­வனை நாடி தனது ஆன்­மிகப் பய­ணத்தை தொடங்­கினார்.

அஹ்மத் கபீர் ரிபாஈ தரீக்­கா

தஸ்­தகீர் சாஹிப்புக்கு சூபிசத்­தைக் கற்­றுத் ­தந்­த ஞானகுரு கிபி 1703- ஆம் ஆண்­டு­களில் வாழ்ந்த மாபெ­ரும் தவஞானி ஹஜ்ரத் க்வாஜா ரஹ்மத்துல்லாஹ் என வரலாற்றுப் பதி­வே­டு­கள் கூறு­கின்­ற­ன. ­நக்­ஷபந்தியா தரீக்காவை பின்பற்றிய இவர், நபிகள் நாய­கத்தின் திருப்­பேரர் அஹ்மத் கபீர் ரிபாஈ ஆண்­ட­வர்கள் தரீக்­காவைச் சேர்ந்­த­வர்கள் எனவும் அறி­ஞர்கள் கூறு­கின்­ற­னர்.

கிபி 1730ல் சென்­னைக்கு விஜ­யம்

நாடு முழு­வதும் ஓரிறைக் கொள்கை கோட்­பாட்டை பிர­சாரம் செய்த தஸ்­தகீர் சாஹிப் வலி­யுல்­லா இறு­தியில் கிபி. 1730ம் ஆண்டுகளில் சென்னை சென்னை திரு­வல்­லிக்­கேணி, நடேசன் சாலை­க்கு வந்­தார். அங்கு இருந்­த­படி ஞான உப­தே­சங்களை போதித்த அவர் ஷெய்த்­தான்­களை விரட்­­டு­வது, நோய், பிணி­களை நீக்­கு­வது என பல அதி­ச­யங்­களை செய்து காட்­டி­யதால் அவர் சென்னை மக்­­களால் போற்­றப்பட்டார்.

தனது உட­லுக்கு தொழுகை நடத்­திய பாவாவின் புனித ஆன்­மா

1751 ஆம் ஆண்டு, ரஜ­பு பிறை­யில் தான் இறக்கப் போவதை தனது தவ வலி­மையால் முன்­கூட்­டியே அறிந்து கொண்டார். தாம் மரணமடைந்தால் வேறு எந்த இமாமும் வந்து தன­க்கு ஜனாசா தொழுகை நடத்த வேண்டாம் என்று தம்முடைய சீடர்களிடம் கேட்டுக் கொண்­டார். அதன்படியே இஸ்­லா­மிய மாதம் ரஜபு பிறை 3ஆம் நாள் அன்று தஸ்­தகீர் சாஹிப் இறை­வ­னடி சேர்ந்தார். அவர் மரணித்த பின் அவரது உடலில் இருந்து பிரிந்து சென்ற அவ­ரது ஆன்­மா மீண்டும் எழுந்து வந்து தமக்குத் தாமே ஜனாஸா தொழுகை நடத்தியது. இதனைக் கண்ட தஸ்­தகீர் சாஹிப்­பின் சீடர்கள் அதி­ச­யத்து நின்­ற­னர்.

அடக்­கத்­தலம் எழுப்­பிய நவாப்

பின்னர் தஸ்­தகீர் சாஹிப் தனது குடும்பத்துடன் வாழ்ந்த இடத்திலேயே அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது. பிறகு 1789 ஆண்டு நவாப் முஹம்மதலி வாலாஜா தமது சொந்த செலவில் தஸ்தகீர் சாஹிப் அவர்களுக்கு அடக்­க­த்­தலம் எழுப்­பி­னார். சென்னை திரு­வல்­லி­க்­கேணி, நடேசன் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் சிட்டி சென்டருக்கு மிக அருகாமையில் இந்த தர்கா அமைந்­துள்­ள­து.

அஸர் நேரத்தில் பாவாவின் நறு­ம­ணம்

தஸ்­தகீர் சாஹிப் வலி­­யுல்லா மறைந்­தாலும் அவர் அடக்­கத்­த­லத்தில் புனித ஆன்­மா­வின் நட­மாட்டம் ­இ­ருப்­ப­தா­க­வும், தினமும் மாலை நேரத்தில் அஸர் தொழுகை சம­யத்­தில் அவ­ரது அடக்­கத்தில் ரோஜாப்பூ நறு­மணம் மூக்கைத் துளைப்ப­தா­க­வும். அந்த நறு­மணம் நம்மை மெய் மறக்கச் செய்யும் என்­கின்­றனர் தர்­காவை பரம்­ப­ரை­யாக நிர்­வா­கம் செய்யும் பிர­மு­கர்­கள். அந்த நறு­ம­­ணத்­தை தஸ்­தகீர் பாவா தர்­கா­வுக்கு வழக்­க­மாக வந்து செல்­கி­ற­வர்கள் உணர்­கின்­றனர். அந்த சம­யத்தில் தர்­கா­வுக்கு வந்து வேண்­டு­தல்­களை கேட்டால் நிச்­சயம் நடக்­கி­றதாம்.

கண­வ­ருக்கு நோய் பிணி நீங்­கிய அதி­ச­யம்

மேலும் தீராத வியா­தி­களும் இந்த தர்­கா­வுக்கு வந்து சென்றால் தீர்­கின்­றது. கடந்த பல மாதங்­களாக தனது கணவர் நோய் வாய்ப்­பட்டு உடல் நலக்­கு­றைவால் காலில் புண் ஏற்­பட்டு நடக்க முடி­யாமல் அவ­திப்­பட்டு வந்­துள்ளார். பின்னர் தஸ்­தகீர் சாஹிப் தர்காவின் அற்­புதங்கள் பற்றி நண்பர் ஒருவர் மூலம் அந்தப் பெண் கேள்­விப்­பட்­டுள்ளார். தனது கண­வரை தஸ்­தகீர் பாவா தர்­கா­வுக்கு கடந்த 7 வாரங்­க­ளாக அழைத்து வந்து பிரார்­த்­தித்­துள்ளார். அதன் பின்னர் அவ­ரது கண­வ­ருக்கு காலில் புண் சரி­யாகி அவர் பழை­ய­படி நன்­றாக நடக்­கிறார் என தஸ்­தகீர் பாவா தர்­காவின் அதி­சயம் பற்றி தெரி­வித்தார்.

குழந்தை பாக்­கியம் கிடைத்த பெண்­ம­ணி

அதே போல மற்­றொரு பெண், தனக்கு திரு­ம­ண­மாகி நீண்ட நாட்­­க­ளாக குழந்தை இன்றி அவ­திப்­பட்டு வந்­துள்ளார். பின்னர் தஸ்­தகீர் பாவா தர்­கா­வுக்கு வாரந்­தோறும் வியாழன் மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மைகளில் வந்து மன­மு­றுகி தனது குறையை தெரி­வித்­துள்ளார். சில மாதங்­க­ளி­லேயே அவர் கரு­வுற்று அழ­­கான பெண் குழந்­தையை பெற்­றெ­டுத்­துள்ளார். அதி­ச­யித்துப் போன அந்தப் பெண் தஸ்­தகீர் பாவாவின் பிரார்த்­தனை கிரு­பையால் தனக்கு அல்லாஹ் குழந்தை வரம் தந்­த­தாக கூறு­கி­றார்.

தர்­காவில் உள்ள பொக்­கி­ஷம்

தஸ்­தகீர் சாஹிப் தர்­காவில் இன்­னொரு அற்­புதமான விஷயம் ஒன்று அங்கு பொக்­கி­ஷமாக பாது­காக்­கப்­பட்டு வரு­கி­ற­து. நபி­க­ள் நாயத்தின் ­பேரர் ஹசன் ரழி­யல்­லாஹ் அன்ஹு அவர்­க­ளது திரு­­மே­னி தாடியில் உள்ள முடி மற்றும், சூபி நாய­கம் அஹ்மத் கபீர் ரிபா­­யி ஆண்­ட­வர்­களின் திரு­மு­கத்தில் உள்ள மீசை முடி ஆகி­யவை வைக்­கப்­பட்­டுள்­­ளது. அந்த இடத்­திலும் பக்­தர்கள் சென்று முத்­த­மிட்டு வணங்கி விட்டு செல்­கின்­றனர். தஸ்­தக்கீர் சாஹிப் வலி­யுல்­லா­வின் நினைவு தின­மான ரஜபு பிறை 3ம் நாள் அன்று வரு­டாந்­திர கந்­தூரி விழா விம­ரி­சை­யாக ஆண்­டு­­தோறும் விம­ரி­சை­யாக நடக்­கி­றது.

மண்­ண­றை­களில் ஜீவ­ச­மா­தி­யாக இறை­வ­னிடம் பிரார்த்­த­னை

அவ்­லி­யாக்கள் என்னும், இறை­நே­சர்கள் இந்த மண்­ணு­லகை விட்டு மறை­ந்­தாலும் அவர்கள் மண்­ண­றை­களில் ஜீவ­சமாதி நிலையில் இருந்­த­படி தன்னை நாடி வரு­ப­வர்­க­ளுக்கு இறை­வ­னிடம் மன்­றாடி பிரார்த்­தித்து அவர்க­ளது கோரிக்­கை­களை நிறை­வேற்றித் தரு­கின்­றனர். இறைவன் தங்­க­ளுக்கு அளித்த சர்வ வல்­லமை கொண்டு இந்த உலகம் உள்­ள­வரை இந்த அவ்­லி­யாக்கள் தங்­க­ளது பக்­தர்­க­ளுக்கு அருள் பாலிக்­கின்­றனர் என்­ப­துதான் அடக்­கத்­த­லங்­க­ளுக்கு வந்து செல்லும் பக்­தர்­களின் மறுக்க முடி­யாத நம்­பிக்­கை­யாக உள்­ள­து.

Comments (0)
Add Comment