திமுக வட்­டா­ரத்தை சூடாக்­கிய விஜய்யின் பேச்சு: மோதலுக்கு தயாரான திமுக

சி.எம். சார்… மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சார்…. என்ன செய்வீங்க மேக்ஸிமம்…. ? கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்தை வச்சு கொள்ளையடிக்குற உங்களுக்கே இவ்வளவு இருந்தா சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்? என த.வெ.க தலைவர் விஜய் எழுப்பிய கேள்விகள் ஆளும் திமுக வட்டாரத்தை படு சூடாகிவிட்டது.

இதனால் இனி விஜய் செல்லும் கூட்டங்களுக்கு பல்வேறு தடைகளும், பிரச்சினைகளும் ஏற்படுவது உறுதி. இதையெல்லாம் தாண்டியே கூட்டம் நடத்துவோம் என விஜய் சூளுரைத்துள்ளார். நேரடியாக திமுகவை சீண்டி பார்த்து விட்டதால் இனி தமிழகத்தில் பல அதிரடி சம்பவங்களும், திருப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

திமுக, அதிமுக என தமிழக அரசியல் களம் சுழன்று சுற்றியடித்த சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு நாங்களும் காலத்தில் உள்ளோம் என பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்து அண்ணாமலை நடத்திய போராட்டங்கள் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு நிலையில் மீண்டும் பாஜ கட்சி வழக்கம்போல காணாமல் போய்விட்டது என்றே கூறலாம்.

இதனால் ஆளும் திமுக நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் இவர்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி 2 மாநில மாநாட்டையும் நடத்தி முடித்தார்.

இதோடு வாகை சூடும் வரலாறு…உங்க விஜய் நா வரேன்… வரலாறு திரும்புகிறது… என்ற தலைப்பில் ஒவொரு பகுதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார். திண்டிவனம் மாநாடு, மதுரை மாநாடுகளில் கூடிய கூட்டம் தமிழக அரசியல் காட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் துறையூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் நடத்த விஜய் பிரச்சாரத்தின்போது கூடிய கூட்டம் எல்லா கட்சிகளையுமே அசைத்துப்பார்த்துவிட்டது. குறிப்பாக ஆளும்கட்சி வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.

திருச்சி கூட்டத்துக்கு போட்டியாக கரூரில் திமுக முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்தினாலும் சாதாரண பிரச்சார கூட்டத்துக்கே ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை கூடியது எல்லா கட்சிகளுமே பீதிதான். இதனால் பிரச்சாரத்துக்கு அனுமதி தருவது என்ற பெயரில் காவல் துறையை வைத்து இதுவரை எந்த கட்சிக்கும் போடாத நிபந்தனைகளையெல்லாம் விதித்து விஜய்யை சூடாக்கி விட்டனர்.

இதன் எதிரொலியாக திமுகவையும், முதல்வர் மற்றும் குடும்பத்தை நேரடியாக வம்புக்கு இழுத்து சவால் விட்டு விஜய் நாகப்பட்டினம் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள்தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்… குறிப்பாக குடும்பத்தை வைத்து கொள்ளையடிப்பதாக நேரடியாக வைத்த குற்றச்சாட்டு ஆளும் கட்சியை பலமாகவே ஆட்டிப்பார்த்து விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூட இந்த அளவிற்கு நேரடியாக குற்றச்சாட்டு வைக்காத நிலையில் விஜய் பேசிய பேச்சுக்கள் திமுக தலைமையை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கி விட்டது.

நேரடியாக திமுக மேலிடத்தையும், முதல்வர், குடும்பத்தைப்பற்றி பேசிவிட்டதால் எரிச்சலடைந்த திமுக ஐ.டி விங் மூலம் தாறுமாறாக திட்டி தீர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களோடு கூட்டணி கட்சி தலைவர்களையும் பேச வைத்து வருகின்றனர். வரும் வாரத்தில் 27-ம் தேதியன்று திருவள்ளூர், வடசென்னை ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது காவல்துறை மூலம் கடும் நெருக்கடி கொடுப்பதோடு, நேரடியாக விஜய்யுடன் மோதுவது என திமுக அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு மேலிடத்தில் இருந்து கிடைத்து விட்டதாம்.

இதனால் மோதல்கள், அடிதடி, மின்சாரம் துண்டிப்பு, அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு, தாக்குதல் என பல்வேறு சம்பவங்களுக்கு இனி பஞ்சம் இருக்காது. ஆனால் விஜய்யுடன் இப்படி மோத ஆரம்பித்தால் கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.யாருடன் மோதல் போக்கை ஏற்படுத்தி அவரை ஆட்சியில் அமர்த்தியதைப்போல தவறு மீண்டும் தவறை திமுக செய்து நேரடியாக விஜய், திமுக மோதல் என மாறிவிடும். இது திமுகவிற்கு நல்லதல்ல.

இளைஞர்களை தன்பக்கம் கொண்டுள்ள விஜய்யுடன் தேவை இல்லாத மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருப்பது திமுகவிற்கு நல்லது. இல்லையேல் துணை முதல்வர் உதயநிதியின் அரசியல் எதிர்காலத்திற்கு இவர்களே சிக்கலை உருவாக்கியதுபோலாகிவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்… இதை திமுக உணருமா? இல்லை மோதலை தொடருவார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும்..

Comments (0)
Add Comment