வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பெரிய அளவில் பிரபலமாகி புகழின் உச்சியை எட்டியது பிக்பாஸ். ஆண்கள், பெண்கள் மற்றும் இளசுகள் முதல் பெரியவர் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி கவர்ந்திழுத்ததால் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தை தொட வைத்து கோடிகளை அள்ளிக் குவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு விஜய் டி.வி.யில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் ஒரு வகையில் வரவேற்பைப் பெற்றாலும் இன்னொரு கோணத்தில் பிக்பாசில், பெண் பங்கேற்பாளர்கள் அணிந்து வரும் உடைகள் ஆபாசமாக உள்ளதாக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வந்தது. பிக்பாஸ் பார்க்கக் கூடாது என மாணவர்களை பெற்றோர் கண்டிக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் ஆபாசம் தலைதெறித்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து பிக்பாஸ் 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சினிமா படப்பிடிப்பு மற்றும் அரசியல் பிசி காரணமாக கமல்ஹாசன் 7வஆ சீசனுடன் நிறுத்திக் கொண்டதோடு தற்போது எம்பியும் ஆகி விட்டார். இதனால் இனி கமல் பிக்பாஸ்சில் பங்கேற்பது நோ என்றாகி விட்டது.
கமலுக்கு பதிலாக முன்னணி நடிகர் விஜய் சேதுபதி திரையில் தோன்றி பிக்பாஸ் பங்கேற்பாளர்களை வியக்க வைத்தார். கமலுக்கு அடுத்தபடியாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதற்காக அவருக்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விஜய் சேதுபதிக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிக்பாஸ் சம்பளம் எகிற காரணம் ரசிகர்கள் தரும் பேராதரவுதான் என்பதால் பிக்பாஸ் சீசன் 9ல் பார்வையாளர்களை கவர பல புதிய கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்படவுள்ளதாம்.