கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒருங்கிணைக்கும் பணியில் நானே ஈடுபடுவேன் என அதிரடியாக பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 10 நிர்வாகிகளை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஜெ. பாணியில் அதிரடி காட்டியுள்ளார் எடப்பாடி. இவரது அதிரடியால் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தானே கட்சியில் பொது செயலாளர் என அறிவிக்க செய்து தானே முதல்வர் பொறுப்பையும் ஏற்க சசிகலா முடிவெடுத்தபோது பதவி ஏற்கும் நாளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா.
இதனால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்த போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயரை சசிகலா முன்மொழிந்தார். ஆனால் முதல்வர் பொறுப்பை செங்கோட்டையன் ஏற்க தயக்கம் காட்டியதால் தனக்கு நெருக்கமாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பெயரை அறிவித்து சசிகலா கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனால் பொன்னையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க தொடங்கினர். சிறையில் இருந்து வந்த சசிகலா மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க நினைத்தபோது பதவி ருசி கண்ட எடப்பாடி டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை பதவிகளில் இருந்து நீக்கி அதிரடியை தொடங்கினார். தர்ம யுத்த போராட்டம் தொடங்கி தனியாக செயல்பட்ட ஓ.பி.எஸ்.ஐ மீண்டும் கட்சியில் சேர்த்து துணை முதல்வர் பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் மீண்டும் எடபடிக்கு எதிராகவும் ஓ.பி.எஸ். போர்க்கொடி தூங்கியதால் அவரை கட்சியில் இருந்தே தூக்கி எறிந்தார் எடப்பாடி.
மேற்கு மண்டலத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உதவியோடு கட்சியை முழுமையாக தன் வசம் எடுத்தார். இவர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை எதிர்த்து ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பல வழக்குகளை தொடுத்தபோதிலும் வழக்குகளை முறியடித்து இதுவரை பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அரசின் செயல்பாடுகள் குறித்து விமரிசித்து வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு கூட்டத்திற்கு தலா 25 லட்சம் நிதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒவொரு கூட்டத்திற்கும் சராசரியாக 10 ஆயிரம் பேரை திரட்டி ஆளும்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ் போன்றோர் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்து ஒருங்கிணைத்த அதிமுகவாக மாற்ற வேண்டும். தங்களுக்கு எந்த பதவியும் வேண்டாம் என கூறி கட்சியில் தங்களை மீண்டும் சேர்க்க கோரிக்கை வைத்தனர்.
ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்களை கட்சியில் சேர்க்கமாட்டேன். இவர்கள் கட்சியின் துரோகிகள் என கடும் விமர்சனம் செய்து கட்சியில் சேர்க்க மறுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கட்சியில் உள்ள தனது தீவிர ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் மூலம் கட்சியில் பிரச்சினையை ஏற்படுத்தியாவது தங்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள மறைமுக போரை சசிகலா தொடங்கியுள்ளார்.
இதற்காக செங்கோட்டையன் மூலம் காய் நகர்த்த தொடங்கிய சசிகலா கட்சி நடவடிக்கைளில் பங்கேற்காமலும், எடப்பாடி பழனி சாமியை சந்திக்காமல் புறக்கணிப்பதிலும் செங்கோட்டையன் தனது மறைமுக போரை தொடங்கினார். ஒருவழியாக செங்கோட்டையனை அவருக்கு வேண்டப்பட்ட மூத்த தலைவர்கள் மூலம் சமாதானப்படுத்தினார் எடப்பாடி.
சில நாட்கள் அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் தனது போராட்டத்தை தொடங்கப்போவதாகவும், தனது திட்டம் குறித்து தெரிவிப்பதாகவும் அறிவித்தார். இதன்படி தனது சொந்த ஊரில் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்.
அப்போதுதான் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர முடியும். மறப்போம், மன்னிப்போம் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலதிதாவின் பாணியில் கட்சியிலிருந்து விலகி மீண்டும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தவர்களை மன்னித்து கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி சேர்க்க வேண்டும். பிரிந்தவர்களை கட்சியில் சேர்ந்து ஒருங்கிணைத்தல் மட்டுமே அதிமுக ஆட்சி மீண்டும் மலரும் என்ற கோசத்தை நிஜமாக்க முடியும். இதற்கு 10 நாட்கள் அவகாசம் தருகிறேன். எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த நடவடிக்கையில் நானே இறங்குவேன் என அதிரடி பேட்டி அளித்தார்.
இவரது பேட்டி அதிமுகவினரிடையே வரவேற்பை பெற்றாலும் சசிகலா, டிடிவி, ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் பல புதிய பிரச்சினைகள் ஏற்படும். சசிகலா கண்டிப்பாக மூத்த தலைவர்களை மீண்டும் தன்வசம் இழுத்து பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க முயற்சிப்பார். இதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்ப்பதால் பல கோஷ்டிகள் உருவாகும். இதனால் தனக்கு கட்சியில் பெரும் பிரச்சினை ஏற்படும் என்பதை உணர்ந்த கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
யாரும் எதிர்பாராத வகையில் செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சி அமைப்பு செயலாளர் போப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டு செங்கோட்டையனுக்கு மட்டுமின்றி கட்சியில் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரும் மூத்த தலைவர்களுக்குக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்துவிட்டார்.
காரணம் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் அவரை அழைத்து சமாதானப்படுத்துவார்கள். அல்லது சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க எடப்பாடி முயற்சிப்பார் என்றே அதிமுகவினர் நம்பிக் கொண்டிருனர். ஆனால் கட்சியில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் தனக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது.
தனக்கு எதிராக யார் போர்க்கொடி தூக்கினாலும் அவர்களை கட்சியிலிருந்து தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிரடி காட்டியதை போலவே எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார் என்றே கூற வேண்டும்.
அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும். அதிமுகவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை மீண்டும் உடைக்க வேண்டும் என்ற ஆளும்கட்சியின் சதி வேலைக்கு துணை போகும் வகையில்தான் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளார் என்பதை அறிந்துகொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சி பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
செங்கோட்டையனுக்கே இந்த நிலைமை என்றல் தங்கள் கதி என்னவாகும். எடப்பாடியை எதிர்த்தால் தங்கள் பதவியும், கட்சி உறுப்பினர் பதவியும் காலி என்பதை உணர்த்தும் வகையில் எடப்பாடியின் இந்த அதிரடி நடவடிக்கை தோன்றுகிறது.
எனவே நாம் வாயை திறந்து எந்த வம்பிலும் மாட்டிக்கொள்ள vendaam என மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கருதும் வகையில் எடப்பாடியின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டது என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். கட்சிக்கு குழப்பம் ஏற்படுத்தி மீண்டும் கட்சியை கைப்பற்றவேண்டும் என திட்டமிட்ட சசிகலா, டிடிவி-க்கு எடப்பாடியின் இந்த அதிரடி பலத்த அடிதான்.