ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பிரசாரம்: பலம், பலவீனம் விஜய்க்கு சாதகமா?

48

– சிவ. செல்­லை­யா

தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தி­ல் இறங்கினாலும் இருதரப்புக்கும் சில வீக்னஸ் இருக்கிறதா பரபரப்பு சர்ச்சை கிளம்பி இருக்கு. தங்க­ளுக்கு கூடுகிற இளைஞர், இளம் பெண்கள் கூட்டத்தை சரியான வழியில வழி நடத்த விஜய் தடுமாறிக் கொண்டு உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்­ள­ன.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆளும் கட்சி தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியும் தங்களது தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்­ள­னர். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மக்களை சந்திப்போம்னு சொல்லி ரோடு ஷோ நடத்த தொடங்கிய­தோடு, வீடு வீடாகப் போய் அரசு திட்டங்கள், செயல்படுத்திய பல சிறப்பு நல திட்ட உதவிகள் பத்தி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்­டு­மென்று வீடு வீடா போய் நேரில் சந்திச்சு பேசுற புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்­துள்­ளளார்.

மதுரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்­றவர் அங்கே பிரமாண்டமான ரோடு ஷோவையும் நடத்தி முடித்துள்­ளார். அடுத்தபடியா­க கடலூரில் இப்போது தொடங்கியுள்­ளார். இதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியும் முழுமையான தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இதேபோல மக்கள் பிரச்சினைகளுக்காகன்னு சொல்லி த.வெ.க. தலைவரும் போராட்ட களத்கில் நேர­டி­யாக குதித்­துள்­ளார்.

ஆனால் 3 பேருக்கும் சாதகமும், பாதகமும் உள்­ள­தாக அரசியல் விமர்ச்சகர்கள் சொல்கின்­ற­னர். முதலில் முதல்வர் ஸ்டாலின் தொகுதி மேலிட பார்வையாளர்கள்னு சொல்லி போன வரு­ட­மே நியமித்­து பூத் கமிட்டி நிர்வாகிகளை தமிழகம் முழுக்க எல்லா தொகுதிக­­ளிலும் நியமித்து தேர்தல் பணிக்கு தயாராகிட்டார். ஆனால் ரோடு ஷோ, வீடு வீடாக போய் சந்திக்கிற திட்டத்தை தொடங்கினாலும் முதல்வர் உடல் நல குறைவால் எல்லா இடங்க­ளுக்கும் செல்ல முடி­ய­வில்­லை. இதனால் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்திக்க வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்­ளளார்
ஆனால் பெரும்பாலான அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மேல மக்களுக்கு அதிருப்தி உள்­ளதால் அவர்கள் ­சென்றால் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்­பதால் முதல்­வ­ரோ செல்­கிறாராம். தனியார் நிறுவனம் மூலமாக சர்வே எடுத்ததில் ஆட்சி மேல் 32 சதவிகித மக்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறதா ரிப்போர்ட் வந்­தது ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலிலை கொடுத்­துள்­­ள­தாம். முதல்ல இதை சரி செய்யாம மக்­க­ளிடம் சென்றால் ஜெயிக்க முடியாது என முதல்வர் ஸ்டா­லின் கரு­கி­றா­ராம்.

இதே போல எடப்பாடி தேர்தல் பிரசாரத்தில் தங்களோட பலம்னு நினைக்கிற கொங்குமண்டலத்துல தொடங்கி டெல்டா மாவட்டத்துல முதல்கட்ட பிரசாரத்தை முடித்­தார். இதுல கொங்கு மண்டலத்துலயும், வட மாவட்டங்கள்லயும் அதிக கூட்டம் கலந்துக்கிட்டது எடப்பாடிக்கு மிகுந்த சந்தோ­­ஷம். ஆனா வ­ரு­கிற வாரத்தில் புதுக்கோட்டையில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிக்க எடப்­பாடி மெகா திட்டம் போட்டுள்­ளா­ர்.

கடந்த சட்டசபை தேர்தலிலே டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். தனியா நின்றதால் அதிமுக கடுமையா சரிவை சந்தித்த­து. இப்போது கூட மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்துல பெரிய சுணக்கம் உள்­ள­து. இதனால் கூட்டம் கூடினாலும் அதை வாக்காக மாற்­று­வது கடினம் என­ கட்சி தொண்டர்கள் புலம்புகின்­ற­னர். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் பூத் கமிட்டி நியமனம் மிகவும் மெதுவாக நடக்க்கி­றது என்ற குற்றச்சாட்டு உள்­ள­து­. இத சரி செய்ய வில்லை என்றால் ஒட்டு வாங்கி ஜெயிக்கிறது கஷ்டமாம்.

இவர்களுக்கு போட்டியா கட்சி தொடங்கி வித்தியாசமான முறையில் அரசியல் செய்யும் நடிகர் விஜய்யை பார்க்க ஏராளமான வாலிபர்கள், இளம்பெண்கள் கூட்டம் ஆவேசத்தோடு கலந்துக்குறாங்க. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்துக்கு கூட ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அதிர்ந்து போற அளவுக்கு கூட்டம் வந்துள்ள­னர். ஆனனல் இவர்­களை முறையாக வழி நடத்தி செல்ல மூத்த நிர்வாகிகள் யாரும் உடன் இல்லாததால இந்தக் கூட்டம் தறிகெட்டு செய்த அடாவடிகள் கட்சிக்கே பெரும் தலைவலியா போய் விடும் என்று சொல்கின்­ற­னனர்.

மேலும் போராட்டம் நடந்த இடத்துல இருந்த இரும்பு பேரி­­கார்டு கம்பிகளை இளைஞர்கள் கூட்டம் பெயர்த்து போட்டுள்­ள­னர். இது பொது மக்களை முகம் சுளிக்க வைத்­துள்­ள­து. இவர்­க­ளை சரியான வழியில வழி நடத்தா விடில் கட்சிக்கு பெரும் பிரச்சினை ஆகி விடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள­து. ஒட்டு கிடைத்தாலும் அதை சரியா பயன்படுத்தா விட்டால் எந்த பயனும் இல்லாமல் போய் விடும். வருகி­ற தேர்தலுக்குள் இந்த பிரச்சினைகளை சரி செய்து விட்டால் தேர்தல் முடிவுகள் கடும் போட்டியாத்தான் இருக்கும் என அர­சியல் ஆர்வ­லர்கள் சொல்­கின்­ற­னர்.