கரூர் உயிர்பலி வழக்கு, கிட்னி திருட்டு வழக்கு மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்குகளில் முறையான புலனாய்வை மேற்கொள்ளாமல் உச்சநீதின்றதில் தொடரப்படும் மேல்முறையீட்டு மனுக்களால் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கிறது. எனவே காவல்துறையிலும், முதல்வர் அலுவலக அதிகாரிகள் மட்டத்திலும் முதல்வர் அதிரடி மாற்றங்களை கொண்டுவர வேண்டும். பீகார் தேர்தல் முடிவடைந்த பிறகு தமிழகத்தில் பல்வேறு அதிரடி சம்பவங்கள் நடக்கும் என்ற நிலையில் முதல்வர் முக்கிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பிரச்சினைகளில் இருந்து வெளிவர முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சேலம், நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளை குறிவைத்து பல ஆண்டுகளாக நடந்து வந்த கிட்னி திருட்டு வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு பிரிவில் தாங்கள் கூறும் காவல்துறை அதிகாரிகளையும் விசாரணை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். கரூரில் 41 உயிர்கள் பலியான சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பில் 3 மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த 3 வழக்குகளும் ஒரே நாளில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் திருச்சி, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு வழக்கில் 2 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த இரண்டு மருத்துவமனைகளும் திமுக பிரமுகர்களால் நடத்தப்படுவது. எனவே இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரிக்க கூடாது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த பிசத்தியேஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு நியமிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்த குழுவில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி.காலையும் சேர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்க்கு தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து அதிக மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது. குற்றச்சம்பவம் நடந்த மாவட்டத்திற்கு அருகேயுள்ள அதிகாரிகளை விசாரணை குழுவில் இணைக்க வேண்டும் என்ற அரசின் யோசனையை ஏற்க முடியாது. முதலில் சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது. பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் தலையிட விரும்பவில்லை என நீதிபதி கூறினார்.
இதேபோல ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது தவறு என தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரியே. இதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இதேபோல கரூரில் விஜய் பிரசாரத்திற்கு சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்க கூடாது. வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே வழக்கு நேர்மையாக நடக்கும் என த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பிலும், கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பிலும், இதேபோல கூட்ட நெரிசலில் உயிரிழந்த பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் சார்பிலும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக சார்பில் வக்கீல் ஜி.எஸ். மணி என்பவரும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அரசியல் காட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கரூர் கூட்ட நெரிசல் வலக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார் . இதில் த.வெ.க தரப்பு வாதங்களை கேட்காமலேயே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுடன், கடுமையான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது தவறு எனவும் வாதிடப்பட்டது. ரோடு ஷோ நெறிமுறைகள் வகுக்க கோரிய மனுவை கிரிமினல் வழக்காக விசாரிக்க முடியுமா? மதுரை உயர்நீதிமன்ற கிளை வரம்பிற்கு உட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு விசாரித்தது? இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க அனுமதி பெறப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் தமிழக அரசு பிராமண வாக்குமூலம் தாக்குதல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 3 மேல்முறையீட்டு மனுக்களில் தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்புகளும், கருத்துக்களும் தெரிவிக்க பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மனுக்களில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் முதல்வருக்கு அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வழக்கு விசாரணைகளில் ஏற்படும் குளறுபடிகள், விசாரணை அதிகாரிகளை முறையாக நியமிக்கதது உள்ளிட்டவையே இந்த பின்னடைவுகளை காரணம். இந்த வழக்குகளில் பின்னடைவு ஏற்படாமல் இருக்க திறமையான அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே ஐ.எஸ்.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்ற முதல்வர் முடிவெடுத்துள்ளாராம். இதனால் முதல்வருக்கு தவறான தகவல்களை கூறி அரசை தர்மசங்கடத்திற்கு உருவாக்கி வந்த அதிகாரிகள் கடும் பீதியில் உள்ளனர்.
இம்மாதம் பீகார் மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகு பாஜக மேலிடம் ஒட்டுமொத்த பார்வையும் தமிழக அரசியல் மீது திரும்புகிறது. இதன் பிறகு ஆளும்கட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த அஸ்திரங்களையும் திருப்பும். பாஜக மேலிட தரும் பிரச்சினைகளில் இருந்து ஆளும்கட்சி மேலிடம் தப்பிக்க வேண்டுமானால் அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எனவே தேர்தல் நெருங்கும் நிலையில் திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம். இதனால் ஜனவரி மாதத்திற்குள் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறது ஆளும்கட்சி வட்டாரங்கள்.